Latestமலேசியா

கட்சி கொள்கைக்கு எதிரான DAP ஆலோசனைகள் ஏற்கப்படாது – அம்னோ திட்டவட்டம்

பெட்டாலிங் ஜெயா, டிச 21 – ஒற்றுமை அரசாங்கத்தில்  தேசிய முன்னணியின் அச்சாணியைபோல்  தோற்றமளிக்கும் அதன் பங்காளிக் கட்சியான DAP  முன்மொழியும்  ஒவ்வொரு ஆலோசனைக்கும் ஒப்புதல் அளிப்பதற்கு  அம்னோ தயாராய் இருப்பதாக பாஸ் கட்சியின் இளைஞர் அணித்  தலைவர்  அஃப்னான் ஹமிமி வெளியிட்ட கருத்தை அம்னோ  சாடியது.   DAP-யின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கட்சியின் கொள்கைகளுடன்  முரண்படும் திட்டங்களை அம்னோ எளிதில் ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்களான புவாட் சர்காஷி மற்றும் வான் அகில் வான் ஹாசன் தெரிவித்தனர். 

DAP எதையும் முன்மொழியலாம், ஆனால் அது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் அம்னோ இணங்கும் என்பதை இது குறிக்கவில்லை. உணர்ச்சிகரமான  பிரச்சனைகளில் DAP-யின்  நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், அம்னோவின் ஒப்புதல் இல்லாமல் அது செயல்படுத்தப்படாது என்று புவாட் சர்காஷி கூறினார். ஒற்றுமை  அரசாங்கத்தில் DAP-யின் பங்கு இருந்தபோதிலும் அக்கட்சியின் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது என அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் வான் அகில் வான் ஹாசன்  தெரிவித்தார். 

இதுவரை, DAP  அறிக்கைகள் எதுவும் அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கைகளாக இல்லை, எனவே அவை அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று முடிவெடுப்பது அரசாங்கத்திற்கு அநீதியாகும்,” என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!