Latestமலேசியா

கட்டுமான துறையில் விலையேற்றம் குறித்து முன்கூட்டியே கருத்துரைக்க முடியாது -அமைச்சர் அலெக்சன்டர் நந்தா லிங்கி தகவல்

கோலாலம்பூர், ஜூலை 4 – டீசல் உதவித் தொகை கட்டுமான தொழில்துறைக்கு விரிவுபடுத்தப்படவில்லை என்பதை பொதுப் பணி அமைச்சர் அலெக்சண்டர் நந்தா லிங்கி ( Alexander Nanta Linggi ) மறுஉறுதிப்படுத்தினார். ஜூன் 10 ஆம்தேதி டீசல் உதவித் தொகை அகற்றப்பட்டதால் கட்டுமான தொழில்துறையில் செலவு அதிகரிக்கும் என்பது குறித்து முன்கூட்டியே மதிப்பிட முடியாது என அவர் கூறினார். இந்த விவகாரத்தை அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதோடு எந்தவொரு புதிய கொள்கைகள் வரையப்படுவதற்கு முன் பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் கவனமாக பரிசீலிக்க வேண்டியிருப்பதாக (Alexander Nanta ) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் சந்தையின் நிலையைப் பொறுத்தே கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு இருக்கக்கூடும் என புள்ளிவிவரத்துறை தகவல் வெளியிட்டிருந்தது. கட்டுமான தொழில்துறையில் சாத்தியமான விளைவுகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படுவதாக Alexander Nanta கூறினார். இயந்திரங்கள் மற்றும் சாதனங்களின் விலை அதிகரித்து வருவதால் குத்தகையாளர்களுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Roslan Hashim வினவிய துணைக்கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இதனை தெரிவித்தார். டீசல் எண்ணெயின் விலை 55 விழுக்காடு உயர்வதற்கு முன் திட்டங்களை பெற்ற குத்தகையாளர்கள் இப்போது கட்டுமான தொழில்துறையில் 15 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை விலை உயர்வை எதிர்நோக்குவதாக ரோஸ்லான் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!