Latestஉலகம்

கனடாவில் நல்ல சம்பளத்தில் வேலை இருந்தும், மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் வழி உதவிப் பெற்ற இந்திய ஆடவர்; வேலையிலிருந்து நீக்கம்

புதுடில்லி, ஏப் 25 – கனடாவிலுள்ள மாணவர்களுக்கான இலவச உணவு வங்கி திட்டத்தில் இலவச உணவு பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தரவு அறிவியலாளர் அது குறித்து காணொளியை வெளியிட்டதைத் தொடர்ந்து தமது வேலையிலிருந்து நீக்கப்பட்டார். கனடாவில் TD வங்கியில் வேலை செய்துவரும் Mehul Prajapati என்ற அந்த நபர் இலவச உணவு பெறும் காட்சியைக் கொண்ட காணொளி வெளியானது. உணவு மற்றும் மளிகை பொருட்களினால் ஒவ்வொரு மாதமும் கணிசமான பணத்தை தாம் சேமித்து வருவதாக வெளியிட்ட காணொளியில் அவர் விவரித்திருந்தார். ஆதாயமற்ற இயக்கங்களான அறநிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைகக்கழகங்களில் மாணவர்களுக்கான இலவச உணவு வங்கியினால் வழங்கப்படும் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் ரொட்டி உட்பட பல்வேறு உணவுகளை தாம் பெற்றுவருவதாக Mehul Prajapati தெரிவித்திருந்தார்.

அந்த காணொளியை பார்த்த பலர் அவரை கடுமையாக குறைகூறினர். TD Canada வங்கியில் Bank Data Scientist ஆக Mehul Prajapati வேலை செய்து வருவதோடு ஒரு ஆண்டிற்கு சராசரி 98,000 டாலர் வருமானத்தை பெற்று வரும் அவர் நன்கொடை உணவு வங்கியின் இலவச உணவை பெறுவது குறித்து பெருமையாக காணொளி வெளியிட்டதை நெட்டிசன்களில் பலர் சாடினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!