Latestஉலகம்

“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்

வாஷிங்டன் ,ஏப் 25 – Tik Tok கை தடை செய்வதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர்    Joe  Biden கையெழுத்திட்ட போதிலும்  அந்த சமூக வலைத்தளம்  தொடர்ந்து  செயல்படுவதற்கான    தமது கடப்பாட்டையும் ஆதரவையும்     Tik Tok  தலைமை செயல் அதிகாரி  Shou Zi Chew   மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.  அமெரிக்க அதிபரின் அந்த நடவடிக்கையினால்   சீன நிறுவனத்திற்கு  சொந்தமான  ByteDanceசின்  Tik Tok   செயலி ஒரு வருடத்திற்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு  விற்க  வேண்டும் அல்லது தடை உத்தரவுக்கான கட்டாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக  அந்த மசோதாவில் கையெழுத்திட்ட பின் Joe Biden  கூறியுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து   உறுதியாக இருங்கள் , நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் என்று   Shou  Zi Chew  பதில் அளித்துள்ளார்.  எந்த தவறும் செய்யாதீர்கள், இது ஒரு தடை, TikTok மீதான தடை மற்றும் உங்கள் குரலுக்கு தடை என  Chew  வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார். 

அரசியல்வாதிகள்   வேறுவிதமாக  கூறலாம். இதனால் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் அவர் வலியுறுத்தினார்.  டிக் டோக்கை ஒன்பது மாதங்களுக்குள்  விற்பனை செய்ய வேண்டும். சாத்தியமானால்    மூன்று மாதங்களுக்கு  இந்த நடவடிக்கை  நீட்டிக்கப்படலாம். ByteDanceசின்  Tik Tok  algorithmமை   Joe Biden  கையெழுத்திட்ட  சட்டம் கட்டுப்படுத்தவதாகவும் இருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!