கிள்ளான், மே 15 – கர்ப்பிணியாக இருந்த தனது காதலியை கொடூரமான முறையில் எரியூட்டி கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஆடவன் ஒருவன், மனநல மருத்துவரின் ஆலோசனை பெற, உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
21 வயது முஹமட் பக்ரோல் ஐமான் சஜாலி எனும் அவ்வாடவன் செய்திருந்த மனுவை செவிமடுத்த பின்னர், நீதிமன்ற பதிவதிகாரி அந்த அனுமதியை வழங்கினார்.
முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம், சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக, முஹமட் பக்ரோலின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அந்த மனு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறி, மாஜிஸ்திரேட் அதனை தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மனநல மருத்துவ பரிசோதனை அறிக்கையை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க ஏதுவாக, இவ்வழக்கு விசாரணை ஜூலை 23-ஆம் தேதி செவிமடுக்கப்படும்