Latestமலேசியா

கலைகளின் சங்கமம்: பண்டார் சன்வேயில் ‘Jeffre Cheah கலை மையம்’ பிரம்மாண்டத் தொடக்கம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-29-JCPAC எனப்படும் Jeffrey Cheah கலை மையம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம், சிலாங்கூர், பண்டார் சன்வே இப்போது கலை மற்றும் பண்பாட்டின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது.

Sunway Square Mall-லில் நடைபெற்ற நேற்றைய பிரமாண்ட தொடக்க விழாவில் உரையாற்றிய சன்வே குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் டத்தின் படுக்கா Sarena Cheah, ஒரு செழிப்பான நகரம் என்பது வெறும் கட்டடங்களால் ஆனது மட்டுமல்ல, அதற்கு ஓர் ‘ஆன்மா’ தேவை என்று குறிப்பிட்டார்.

வணிக மற்றும் கல்வி வளர்ச்சியுடன் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இந்தக் கலை மையம் விளங்கும் என, அவர் தமதுரையில் கூறினார்.

பின்னர், வணக்கம் மலேசியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், JCPAC கலை இயக்குனர் மெலிசா தியோ (Melissa Teoh), மலேசிய கலைஞர்களுக்கு ஒரு புகலிடமாகவும், அனைத்துலகத் தரத்திலான மேடை நிகழ்ச்சிகளுக்கான நுழைவாயிலாகவும் இந்த மையம் அமையும் என்றார்…

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ‘Puteri Gunung Ledang ‘ போன்ற புகழ்பெற்ற மேடை இடை நாடகங்கள் இங்கு அரங்கேறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Teater Prosenium அரங்கில் 1,200 இருக்கைகள், Teater Eksperimental அரங்கில் 150 இருக்கைகள் என நவீன வசதிகளுடன் கூடிய இந்தக் கலை மையம் மலேசிய கலைத் துறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!