
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10-கழிப்பறை தூய்மை குறித்த பிரச்னை, இறுதியில் வெட்டுக்குத்தில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் கோலாலம்பூர், தாமான் செராஸ் பாருவில் நடந்துள்ளது.
தங்கியிருந்த வாடகை வீட்டில் கழிப்பறையைத் தூய்மையாக வைக்குமாறு அடிக்கடி அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த வங்காளதேச ஆடவர், தன்னுடன் தங்கியிருந்த சக நாட்டவரையே கத்தியால் வெட்டியுள்ளார்.
உள்ளூர் உணவகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 36 வயது நபருக்குக் பலத்த காயம் ஏற்பட்டது.அவர் உடனடியாக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விசாரணையில், இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வந்தது தெரியவந்துள்ளது.30 வயது சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



