
காஜாங், ஜூலை-21 – சிலாங்கூர், காஜாங், பண்டார் மக்கோத்தா செராஸில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பலத்த கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து, போலீஸார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சுயநினைவின்றி ஒருவர் கிடப்பதாகக் காலை 8.45 மணிக்கு அவசர உதவி அழைப்பு வந்துள்ளது.
விரைந்து சென்ற போலீஸார், அடையாள ஆவணங்கள் எதுவும் இன்றி, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
தொடக்கக்கட்ட பரிசோதனையில் உடலில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது.
காஜாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், கத்திக் குத்துகளால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுப் பெருக்கெடுப்பே இறப்புக்கான காரணம் என்பதும் உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து குற்றவியல் சடட்டத்தின் கீழ் கொலை வழக்காக இது விசாரிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கைதுச் செய்யவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



