
கோலாலம்பூர், ஜூலை-21 – உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜேண்டினா தோல்வியடைந்தால் மனைவியை விவாகரத்து செய்வதாகப் பந்தயம் கட்டி, தலாக் மொழிந்த கணவரின் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய பயன்படுத்தும் ஒரு நடைமுறைதான் தலாக் (Talaq) ஆகும்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவத்தில், அர்ஜேண்டினாவின் தோல்வியைத் தொடர்ந்து கணவன் தமக்குத் தலாக் விடுத்ததாக மனைவி ஒருவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மத அறிஞர்கள், நிபந்தனை அடிப்படையில் விடுக்கப்படும் இதுபோன்ற தலாக் கூற்றுகள் கடுமையான சட்ட மற்றும் மார்க்கச் சிக்கல்களை உண்டாக்கக்கூடியவை என எச்சரித்துள்ளனர்.
விவாகரத்து, திருமணம் போன்ற விவகாரங்களை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது பந்தயமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை இஸ்லாமியச் சட்டம் கடுமையாக வலியுறுத்துகிறது.
எனவே, இத்தகையச் சூழலில் சிக்கியுள்ள தம்பதியர், சட்டப்பூர்வமான மற்றும் முறையான தீர்வைப் பெற உடனடியாக ஷரியா நீதிமன்றத்தை நாட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விளையாட்டுப் பொழுதுபோக்குகளை ஒருபுறம் இருக்க, குடும்ப வாழ்வின் புனிதத்தன்மையைப்பாதிக்கும் இதுபோன்ற பொறுப்பற்றச் செயல்களுக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வு அவசியமானது என வலைத்தளவாசிகளும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.



