Latestமலேசியா

காஜாங்கில் பள்ளிக் கட்டிடத்தின் 5ஆவது மாடியிலிருந்து விழுந்த மாணவன் மரணம்

காஜாங், ஜூன் 30 – இரண்டு நாட்களுக்கு முன் காஜாங்கிலுள்ள பள்ளிக் கட்டிடத்தின் 5ஆவது மாடியிலிருந்து விழுந்த மாணவன் ஒருவன் நேற்று இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 வயதுடைய அந்த மாணவன் நேற்று அதிகாலை இரண்டரை மணியளவில் மரணம் அடைந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) தெரிவித்தார். CCTV-யில் பதிவான காணொளி காட்சியில் அந்த பள்ளிக் கட்டிடத்தின் ஐந்தாவது மாயிலிருந்து அந்த மாணவன் கீழே விழுந்ததாக நம்பபப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலில் பல பகுதிகளில் காயத்திற்குள்ளான அந்த மாணவன் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான். உயரமான இடத்திலிருந்து விழுந்ததே அந்த மாணவனின் மரணத்திற்கு காரணம் என நஸ்ரோன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் விவரங்களை கண்டறிவதற்காக காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!