
காஜாங், ஜூலை-17-சிலாங்கூர், காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வீடொன்றின் முன் பகுதியில் உணவைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஆண் மற்றும் அவரது வருங்கால மனைவியும் என நம்பப்படுவதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 2.27 மணிக்கு தகவல் கிடைத்து 20தில் இருந்து 30 வயதுக்கு உட்பட்ட அம்மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காவல் படையின் சின்னமும் வாசகமும் பொறிக்கப்பட்ட ஒரு சட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான போது அவர்கள் உணவு எதனையும் திருடவில்லை. ஆயினும் வெவ்வேறு தேதிகளில் அவர்கள் அவ்வாறு செய்திருப்பது CCTV காட்சிகளில் தெரிய வந்துள்ளது.
ஆடவரும் அவரது வருங்கால மனைவியும் ஏற்கனவே ஆறு முதல் எட்டு போதைப்பொருள் மற்றும் குற்றப் பதிவுகள் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரிய வந்ததாக Naazron கூறினார். விசாரணைக்கு உதவ அவ்விருவரும் ஜூலை 18 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு ஆடவர் காவல் துறையின் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன் வருமாறு Naazron பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
ஒரு வீட்டின் முன்புறம் சிலர் உணவைத் திருடும் CCTV காட்சிகள் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



