
கோலாலம்பூர், ஜூலை 10- கடந்த மாதம் மலேசியா செல்வதற்கு விமானத்தில் ஏறிய 17 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, மலேசிய குடிநுழைவுத்துறை நுழைவுப் பதிவு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்ற இருந்தபோதும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென்றும் இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
டேவிட் பாலிசோங் என்ற அந்த இளைஞர் கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று தனது சகோதரரிடம் தொடர்புக்கொண்டு பேசியிருக்கின்றார் என்றும் அவர் அதே நாளில் யாருக்கும் தெரிவிக்காமல் கோலாலம்பூருக்கு ஒரு வழி விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.