Latestமலேசியா

கார் நிறுத்துமிடங்களில் அனுமதியின்றி செயல்படும் கும்பலை அகற்ற கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உத்தரவு

கோலாலம்பூர், டிச 31 – கோலாலம்பூரில் பொது கார் நிறுத்தும் இடங்களில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் நபர்களை முழுமையாக அகற்ற் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கார் நிறுத்தும் இடங்களில் நிறுத்திவைக்கும் வாகனங்களை கண்காணிக்கும் அனுமதியற்ற இந்த நபர்கள் பணம் கொடுக்க மறுக்கும் கார் உரிமையாளர்களின் கார்களை கிறுக்குவது மற்றும் சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களை முற்றாக துடைத்தொழிக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைய சில நாட்களாக தமக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த உத்தரவை கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிறப்பித்துள்ளதாக பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்திருக்கிறார்.

கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் கார் நிறுத்தும் இடங்களில் செயல்படும் அந்த நபர்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக புகார்களை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ரோந்து நடவடிக்கைகைளை அதிகரிக்கும்படி கோலாலம்பூர் மாநாகர் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நள்ளிரவு வேளையில் புக்கிட் பிந்தாங்கிலுள்ள பொது கார் நிறுத்தும் பகுதியில் கார் நிறுத்தியதற்காக 15 ரிங்கிட்டை வழங்கும்படி நபர் ஒருவர் மிரட்டியதாகவும் இதனை மறுத்ததால் தமது கார் டிசம்பர் 27ஆம் தேதி கிறுக்கப்பட்டதாக அசிரஃப் ரோஸ்லி என்பவர் காணொளி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து டாக்டர் ஸாலிஹா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த காணொளியை இதுவரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டுள்ளோர் பார்த்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!