Latestமலேசியா

கார் பூட் மூலம் மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சிங்கை ஆடவன் கைது

இஸ்கந்தர் புத்ரி, மார்ச் 4 – Sultan Iskandar சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் மையத்தின் கட்டிட வளாகத்தின்  மூலமாக  மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக  நுழைய முயன்ற சிங்கப்பூர் ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.  50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவன்   மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட  கார்  Boot ட்டிற்குள்  ஒளிந்துகொண்டிருந்தாகவும் டிசம்பர்  13 ஆம் தேதி மாலை மணி 3.30 அளவில் கைது செய்யப்பட்டதாக  Johor சுங்கத்துறையின்  இயக்குநர்  Aminul Izmeer Mohd Sohaimi   தெரிவித்தார்.  பரிசோதனைக்காக அக்கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் பின்புறம் எடை அதிகமாக இருந்ததால்   கார்  Boot ட்டை நாங்கள் திறந்தபோது அதற்குள் ஆடவன் ஒளிந்திருப்பதை கண்டோம்.  அந்த  ஆடவனை கைது செய்தபோது அவனிடம் எந்தவொரு பயண  ஆவணங்களும் இல்லையென Aminul கூறினார்.  

அந்த நபருக்கு உதவிய மலேசியாவைச் சேர்ந்த  20 வயதுக்குட்பட்ட இரண்டு  பெண்களும் கைது செய்யப்பட்டனர்.  சட்டவிரோதமாக   மலேசியாவுக்குள் கொண்டுச் செல்வதற்காக   அந்த இரு பெண்களுக்கும்  அந்த சிங்கப்பூர் ஆடவன்  3,000 சிங்கப்பூர் டாலர்  அல்லது  10,555 மலேசிய ரிங்கிட் வழங்கியிருப்பதும் விசாரணையில்   தெரியவந்ததாக  Aminul   கூறினார்.  அந்த  ஆடவருக்கு   சில சட்ட விவகாரம் இருப்பதால் சிங்கப்பூர் குடியரசு கடப்பிதழை விநியோகிக்கவில்லை .  அந்த மூவரும்  1959 மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டம் மற்றும் ஆள்கடத்தலுக்கு எதிராக  மற்றும்  குடியேற்றக்காரரை  கடத்தியதாக  ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!