Latestமலேசியா

காலிட் நோர்டின் புதிய தற்காப்பு அமைச்சர்; முகமட் ஹசான் ஸம்ரி புதிய அமைச்சுக்கு மாற்றம்

கோலாலம்பூர். டிச 12 – புதிய தற்காப்பு அமைச்சராக அம்னோவின் உதவித் தலைவர் டத்தோ காலிட் நோர்டின் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தற்காப்பு அமைச்சராக இருந்த முகமட் ஹசான் தற்போது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் வெளியுறவு அமைச்சராக இருந்த ஸம்ரி அப்துல் காதீர் தற்போது உயர்க் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை துணையமைச்சராக இருந்த பொண்தியன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் தற்போது பொதுப் பணித்துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பியூஃபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தி அமினா ஆச்சிங் அமைச்சரவை பட்டியலிருந்து நீக்கப்பட்ட அம்னோவின் ஒரே துணையமைச்சராக திகழ்கிறார். அவர் இதற்கு முன் தோட்ட மற்றும் மூலத் தொழில் துணையமைச்சராக இருந்துள்ளார். லிப்பிஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் ரஹ்மான் முகமட் பொதுப்பணித்துறை துணையமைச்சர் பதவியிலிருந்து மனித வள துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!