உலு சிலாங்கூர், ஜூலை 27 – உலு சிலாங்கூரில் ஒரு வார காலமாக ஆண் மாணவர்களிடம் ஆபாச சேட்டை புரிந்து வந்த ஆசிரியர் கைதாகியுள்ளார்.
அம்மாவட்டத்திலுள்ள ஆரம்பப் பள்ளியொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், கால்பந்துப் போட்டியில் உலு சிலாங்கூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்து விளையாட தேர்வான 12 வயது மாணவர்கள் என தெரிய வருகிறது.
உலு யாமில் உள்ள தங்குமிட அறை உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் வைத்து, ஆண் மாணவர்களிடம் அந்த ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துக் கொண்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 4 போலீஸ் புகார்களின் அடிப்படையில், 30 வயது அவ்வாடவர் நேற்று அதிகாலை கைதானார்.
2017 சிறார் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, அந்நபர் 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.