Latestமலேசியா

கிணறு தோண்டியபோது மண்ணில் புதையுண்ட இளைஞர் மரணம்

பாசீர் மாஸ், ஏப் 16 – பாசீர் மாஸில் Kampung Gelam Tok Uban னில் கிணறு தோண்டியபோது மண் சரிந்ததால் 6.1 மீட்டர் ஆழந்தில் இளைஞர் ஒருவர் புதையுண்டதால் மரணம் அடைந்தார். நேற்று மாலை மணி 6.17 அளவில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் 23 வயதுடைய Mohamad Khairul Jeffry Maarof என்பவர் இறந்தாக அடையாளம் காணப்பட்டது. மண் வாரி இயந்திரத்தின் உதவியோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் அவரது உடலை மீட்டனர். பொதுமக்களிடமிருந்து தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் புதையுண்டவரின் உடலை மீட்டதாக பாசீர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் Mohd Azmi Hussin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!