கோத்தா பாரு, மே 28 – கும்பலாக ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதாக, முடிதிருத்தும் ஆடவன் ஒருவனுக்கு எதிராக இன்று கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 21 வயது முஹமட் அல்தாப் இசிராப் ஜாஸ்லான் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
அல்தாப், இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர மூவருடன் இணைந்து, ஆயுதத்தை காட்டி மிரட்டி, 26 வயது முஹமட் சபூவான் ஹரிஸ் இப்ராஹிம் எனும் நபரை அச்சிறுத்தி, அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும், மூன்று கைப்பேசிகளையும், தங்க கட்டி ஒன்றையும் அகபரித்து சென்றதாக கூறப்படுகிறது.
இம்மாதம் 16-ஆம் தேதி, காலை மணி 11 வாக்கில், குபாங் கெரியான், கம்போங் வாகாவ் ஸ்டான் எனுமிடத்தில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
15 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் ல்தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவன் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் 25-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.