Latestமலேசியா

கிளாந்தானில் ரப்பர் தோட்டத்தில் காணாமல் போன ஒன்றரை வயதுக் குழந்தை பத்திரமாக மீட்பு

குவாலா கிராய், நவம்பர் 23 – கிளாந்தான், கம்போங் பெச்சா சாலாக் (Kampung Bechah Salak) பகுதியில் நேற்று மாலை தனது வீட்டின் அருகே காணாமல் போன ஒரு வயது எட்டு மாத ஆண் குழந்தை, இன்று காலை ரப்பர் தோட்டத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது.

அக்குழந்தை, காலை 10.20 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பாங்கான ரப்பர் தோட்டப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஒருவர் குழந்தையைக் கண்டுபிடித்ததாக சுங்கை டுரியான் (Sungai Durian) தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத் தலைவர் சுல்ஹில்மி பஹாருடின் (Zulhilmi Baharudin) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!