கிள்ளான், ஜூன் 17 – கிள்ளான் ஜாலான் இஸ்தானா, Taman Bahagia Jaya, Lorong Langat- ட்டைச் சேர்ந்த நாராயணமூர்த்தி சுப்ரமணியம் அல்லது ஜோ என்பவரை அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர். 5 அடி 9 அங்குலம் மற்றும் 65 முதல் 70 கிலோ எடையைக் கொண்ட ஜோ, ஜூன் 3ஆம் தேதி முதல் காணவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். மனநிலை குன்றிய மாற்றுத் திறனாளியான அவர் பேராவில் மனநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது தயார் இறந்ததைத் தொடர்ந்து இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவர் தீடிரென காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆகக்கடைசியாக ஜூன் 3ஆம் தேதி மாலை மணி 6.30 அளவில் கிள்ளான் ஜாலான் இஸ்தானா , Lorong Langat , Taman Bahagia Jaya- விலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜோ காணப்பட்டதாகவும் அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. எனவே அவரை காணும் பொதுமக்கள் உடனடியாக
011 -10601256 , 011 – 10999542 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.