கிள்ளான், செப்டம்பர் 13 – கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் அமைந்துள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக நல இல்லங்கள், பள்ளிகள், உணவு மற்றும் தின்பண்ட கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, குளோபல் இக்வானுக்குச் சொந்தமான இந்த நிறுவனங்களில், சிறுவர்களே பணிபுரிந்து வந்துள்ளதாகச் சுற்று வட்டார வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பெற்றோர்கள் அற்ற அந்த சிறுவர்கள் கடையில் உள்ள தின்பண்டங்களை வீடமைப்புப் பகுதியில் நடந்து சென்று விற்பதும் வழக்கம் என்று கூறியிருக்கின்றனர், அந்த வியாபாரிகள்.
முன்னதாக, சிறார்கள் துன்புறத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் குளோபல் இக்வான் வழிநடத்திய 20 சமூக நல இல்லங்களில், மேற்கொண்ட அதிரடி சோதனையில், ஒரு வயது குழந்தையிலிருந்து 17 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர்கள் போலீசாரால் காப்பாற்றப்பட்டனர்.