
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – குடிநுழைவுத் துறையின் சின்னம் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் தொடர்பான வைரல் காணொளி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், காணொளி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளரின் மனைவியால் ஆகஸ்ட் 7ஆம் தேதி புலனத்தில் பதிவேற்றப்பட்ட பின்னர் வைரலானது தெரியவந்துள்ளது.
வாகன உரிமையாளர், சின்னம் மற்றும் எச்சரிக்கை விளக்குகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பொருத்தியதாகவும், அது சட்டவிரோதம் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார். அவை பின்னர் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகனமும் அதில் இருந்தவர்களும் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வாகனம் குடிநுழைவுத் துறைக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ வாகனம் அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



