Latestமலேசியா

Mercedes-Benz காரின் சின்னம் தீக்காயங்களை ஏற்படுத்தியதா? அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த இருவர்

கலிபோர்னியா, ஆகஸ்ட்-10-ஆடம்பரம், மவுசு மற்றும் சொகுசு வசதி வாகனங்களுக்குப் பெயர் போன Mercedes நிறுவனம், சர்ச்சையொன்றில் சிக்கியிருப்பது கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.

Mercedes-AMG சொகுசு காரின் ஓட்டுநர் இருக்கையில் உள்ள AMG சின்னத்தால் தங்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறி இருவர் அக்கார் நிறுவனத்திற்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்திக் கூட்டு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

சூரிய வெப்பத்தால் அச்சின்னம் மிகவும் சூடாகித் தீக்காயங்களை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனை மையத்தில் இருந்து ஒரு புதிய Mercedes AMG E-கிளாஸ் காரை வாடகையில் எடுத்ததாகவும் அதில் இருந்த சின்னம் வெப்பத்தால் சூடேறி முதுகில் காயத்தை ஏற்படுத்தியதாகவும் அவ்விருவரில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுகில் AMG என்ற அடையாளமும் இருந்ததாக அவர் விவரித்துள்ளார்.அச்சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களுக்கு பிறகு அதே சின்னத்தால் தமக்கும் காயங்கள் ஏற்பட்டதாக பெண் ஒருவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தோள்பட்டையில் தமக்குக் காயம் ஏற்பட்டு அதனால் எரிச்சல் உண்டாகி பின்னர் தோல் கருமையானதாக அவர் குறை கூறியுள்ளார்.இந்நிலையில் தங்களது ஆதங்கங்களை வெளியிட்ட அவ்விருவரும் இறுதியில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!