Latestமலேசியா

நீலாய் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மோதல் ; ‘பெர்ராரி’ & ‘பெரோடுவா அருஸ்’ ஓட்டுநர்கள் சமரசம்

நீலாய், ஆகஸ்ட் 10 – PLUS நெடுஞ்சாலையின் 276ஆவது கிலோமீட்டரில் Ferrari மற்றும் Perodua Aruz ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விவகாரத்தில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர்.

40 வயதான Ferrari ஓட்டுநரும், 35 வயதான Perodua Aruz ஓட்டுநரும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டதாக நீலாய் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்தெண்டன் ஜோஹாரி யஹ்யா (Superintendan Johari Yahya) தெரிவித்தார்.

சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இரு தரப்பினரும் இணைந்து ஊடக அறிக்கை வெளியிடவும் ஒப்புக்கொண்டனர்.

எனினும், சமரசம் ஏற்பட்டாலும் காவல்துறை விசாரணை தொடரும் என்றும், இருவரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!