Latestமலேசியா

குனுங் ஹிதம் மலை உச்சியில் மலையேறும் வழிகாட்டி மயங்கியபின் மரணம்

கோலாலம்பூர் , ஜூன் 2 – Ulu Langat Gunung Hitam உச்சியை சென்றடைந்தபின் மயக்கமுற்ற மலையேறும் வழிகாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று காலை மணி 11.48 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் துணை இயக்குநனர் Ahmad Mukhlis Mokthar தெரிவித்தார். மருத்துவ உதவியாளர்கள் மாலை மணி 4.30 அளவில் Gunung Hitam சென்றடைந்தபோது அவர் சுவாசித்துக் கொண்டிருந்தார் என மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் மாலை 5.30 மணியளவில் அவர் இறந்துவிட்டார் என அவர்கள் உறுதிப்படுத்தினர். Norfazli Abdul Aziz என்று அடையாளம் கூறப்பட்ட அவர் Malim Gunung மலையேறும் குழுவின் மூத்த உறுப்பினராவார். அவர் மீட்பு நடவடிக்கையின்போது அடிக்கடி தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு உதவி வந்துள்ளதாகவும் Ahmad Mukhlis தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!