Latestஅமெரிக்கா

குற்றச் செயல்கள், விதிமீறல்கள் எதிரொலி; 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா

வாஷிங்டன், ஆகஸ்ட் 19 – குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.

தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் இந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் சட்டம் அல்லது விசா விதிமுறைகளை மீறுவதையும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என அது கூறியிருக்கிறது.
.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தாக்குதல் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் விசா ரத்து செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதுடன், பெரிய அளவிலான நாடு கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக Donald Trump அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!