Latestமலேசியா

குளுவாங்கில், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது ; 3 இராணுவ வீரர்கள் காயம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 28 – ஜோகூர், மஹ்கோத்தா குளுவாங் முகாமில், ஹெலிகாட்பர் ஒன்று அவசரமாக தரையிறங்கிய சம்பவத்தில், அதில் பயணித்த மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை மணி 1.35 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த M81-11 (A109 LOH) ரக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதை, மலேசிய தரைப்படை ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஹெலிகப்டரில் பயணித்த மூவர், எலும்பு முறிவு உட்பட உடலில் காயங்களுக்கு இலக்காகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைகாக குளுவாங், என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் (Enche Besar Hajjah Khalsom) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில், விசாரணை மேற்கொள்ள விசாரணை வாரியம் ஒன்று அமைக்கப்படவுள்ள வேளை ; சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் தற்காலிகமாக சேவையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!