Latest
குவாலா சிலாங்கூரில் படுதா துணியில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய உடல் கண்டுபிடிப்பு

குவாலா சிலாங்கூர், ஏப்ரல்-21-குவாலா சிலாங்கூரில் மனித உடல் ஒன்று canvas படுதா துணியில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உடல் Pulau Angsa-வில் துர்நாற்றம் வீசியதாக பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடம் விரைந்த போலீஸார், உடல் இறுக்கமாக கட்டப்பட்டு படுதாவில் சுற்றப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினர்.
சவப் பரிசோதனையில், அந்த ஆடவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இருப்பினும், அவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் கொலைக் குற்றமாக பதிவுச் செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்தவர்கள் உடனடியாக போலீஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



