Latestமலேசியா

கெடாவில், ஊழியர்களை ஏற்றச் சென்ற தொழிற்சாலை வேன் கடுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது; ஓட்டுனர் பலி

பாலிங், பிப்ரவரி 6 – கெடா, குவாலா கெட்டில், ஜாலான் கம்போங் குவாலா பாகோங் சாலையில், தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றச் சென்ற வேன் ஒன்று, கடுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

இன்று காலை மணி 8.36 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில், உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, 64 வயது மெஹ் மாட் ஜீன் என்பவர் உயிரிழந்தார்.

தொழிற்சாலை ஊழியர்களை ஏற்ற பாலிங்கிலிருந்து, பாடாங் செராய்க்கு பயணமான அந்த நிசான் ரக வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சம்சுடின் மாமாட் உறுதிப்படுத்தினார்.

சம்பவ இடத்தை சென்றடைந்ததும் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன், சாலையின் வலது புறத்தில் இருக்கும் செங்குத்தான சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானதாக சம்சுடின் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!