சுங்கை பெட்டாணி, பிப்ரவரி 29 – கெடா, சுங்கை பெட்டாணி, கம்போங் லெபாய் மான் கிராமத்தில், வீடு ஒன்றும், வாகனம் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றும் தீக்கிரையானது.
இன்று அதிகாலை மணி 6.06 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த தீ விபத்தில், நான்கு கார்களும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் முற்றாக அழிந்தன.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.