Latestமலேசியா

கெந்திங்கில் பேருந்து பிரேக் செயல் இழந்து சாலை தடுப்பில் மோதியதில் ஓட்டுனர் காயம்

ஜாலான் கெந்திங் சாலையின் 2.6 ஆவது கிலோமீட்டரில் பேருந்து ஒன்றின் பிரேக் செயல் இழந்ததைத் தொடர்ந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 38 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவரால் கெந்திங்கிலிருந்து கோலாலம்பூரை நோக்கி ஓட்டிச் சென்ற அந்த பேருந்து நேற்று நண்பகல் மணி 1.40 அளவில் விபத்திற்குள்ளானதாக பெந்தோங் (Bentong) மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zaiham Mohd Kahar தெரிவித்தார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் காயம் அடைந்த வேளையில் அதிலிருந்த 20 பயணிகள் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர். இதனிடையே சாலையைப் பயன்படுத்தியோர் இச்சம்பவத்தை நேரில் பார்த்திருந்தால் விசாரணைக்கு உதவுவதற்காக போலீசுடன் தொடர்புகொள்ளும்படி Superintendan Zaiham கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!