Latestமலேசியா

கெப்போங்கில், ஆயுதம் ஏந்தி ATM இயந்திரத்தை கொள்கையிட்ட இருவர் கைது ; மேலும் சில குற்றச்செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது

கோலாலம்பூர், ஜனவரி 12 – தலைநகர், கெப்போங்கிலுள்ள, ஹாங் லியோங் வங்கியின், ATM பணப்பட்டுவாடா இயந்திரம் கொள்ளை வங்கியின், ATM பணப்பட்டுவாடா இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு சந்தேக நபர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

கடந்தாண்டு, டிசம்பர் 27-ஆம் தேதி, இரவு எட்டு மணியளவில் அந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.

அச்சம்பவத்தின் போது, தலைகவசத்துடன்  வங்கிக்குள் நுழைந்த ஆடவன் ஒருவனுக்கும், அங்கு பணியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் ஒருவருக்கு இடையில் கைகலப்பு மூண்டது.

எனினும், கொள்ளையிட வந்தவன், சிறு கத்தியை கொண்டு தாக்கியதால், பணியில் இருந்த நபர், கையில் வெட்டுக் காயத்திற்கு இலக்கானதாக, செந்தூல் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மாட் சுகார்னோ மோ ஜஹாரி தெரிவித்தார்.

அதன் பின்னர், அங்கிருந்த பணப்பட்டுவாடா இயந்திரத்தை கொள்ளையிட்டு அவன், பின்னர் வங்கிக்கு வெளியில்  மோட்டார் சைக்கிளில் காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றான்.

அந்த கொள்ளை தொடர்பில், இம்மாதம் நான்கு மற்றும் ஆறாம் தேதிகளில், பேராக்,  பஹாங் ஆகிய மாநிலங்களில் போலீஸ் மேற்கொண்ட சோதனையில், 38 வயதான இரு உள்நாட்டு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களை கைதுச் செய்ததன் வாயிலாக, இதற்கு முன் கோலாலம்பூரில் புகார் செய்யப்பட்டிருந்த ஆறு குற்றங்களுக்கும், பேராக் மாநிலத்தில் புகார் செய்யப்பட்டிருந்த 28 குற்றங்களுக்கும் தீர்வுக் காணப்பட்டிருப்பதாக, சுகார்னோ சொன்னார்.

ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதோடு, காயம் விளைவித்த குற்றத்திற்காக அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397-வது பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதையும் சுகார்னோ உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!