Latestமலேசியா

கெமமான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் 37,200 வாக்குகள் பெரும்பான்மை வாக்குகளில் சம்சுரி வெற்றி

கோலாலம்பூர், டிச 3 – கெமமான் நாடாளுமன்ற தொகுதியை 37,200 பெரும்பான்மை வாக்குகளில் பாஸ் கட்சி தற்கவைத்துக் கொண்டது. நேற்று நடைபெற்ற அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஸ் கட்சியின் உதவித் தலைவரான தெரெங்கானு மந்திரிபுசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் மொத்தம் 64,998 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வு பெற்ற முன்னாள் தற்காப்பு படைகளின் தலைவரான தேசிய முன்னணியின் வேட்பாளர் ராஜா அஃபாண்டி 27,778 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார். கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளரான சே அலியாஸ் ஹமீட்  27,179 பெற்ற பெரும்பான்மை வாக்குகளைவிட இந்த இடைத் தேர்தலில் பாஸ் அபரிதமான பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றது.

ஒரு காலத்தில் தேசிய முன்னணியின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட கெமமான் தொகுதியை முதல் முறையாக 2018ஆம் ஆண்டு தேர்தலில் சே அலியாஸ் கைப்பற்றினார். இதனிடையே வெற்றி பெற்ற பாஸ் கட்சிக்கு தனது வாழ்த்தை தெரிவித்த அம்னோ தலைமைச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி, இதனால் கூட்டரசு ஒற்றுமை அரசாங்கத்தின் நிலையில் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது என தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!