Latestமலேசியா

கேபிள் கார் திட்டத்திற்கு வழி விட்டு Waterfall Café உணவகத்தை இடம் மாறச் சொல்வதா? பினாங்கு அரசை கதற விட்ட டாக்டர் பி ராமசாமி

பினாங்கு, மார்ச் 17 – பினாங்கு Botanical Gardens-சில் உள்ள பிரபல Waterfall Café உணவக உரிமையாளர் எஸ். ஆனந்த ராஜுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி சாடியுள்ளார்.

ஆனந்த ராஜ், அவரின் தந்தை, தாத்தா என ஒட்டுமொத்த குடும்பமே நூறாண்டுகளுக்கும் மேலாக அந்த உணவகத்தை நடத்தி வருகிறது.

இப்படியிருக்க, அவ்விடத்தை காலிச் செய்து விட்டு வேறு இடத்திற்கு மாறிச் செல்லுமாறு தீமோர் லாவோட் நில மேம்பாட்டுத் துறை அவருக்கு உத்தரவிட்டுள்ளது குறித்து ராமசாமி கேள்வி எழுப்பினார்.

அவ்வுத்தரவுக்கு, கேபள் கார் திட்டத்தை ஒரு காரணமாகக் கூறுகிறது நில மேம்பாட்டுத் துறை; உண்மையிலேயே மாநில அரசுக்கு மனமிருந்தால், நல்ல முறையில் அவ்விவகாரத்திற்குத் தீர்வு காணலாம் என ராமசாமி சுட்டிக் காட்டினார்.

“அவரை அங்கிருந்து துரத்த மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியாகவே அதை நான் பார்க்கிறேன்” என பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சருமான ராமசாமி கூறினார்.

நடப்பு பினாங்கு அரசும் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் அவருக்கு உதவிக் கரம் நீட்ட தயாராக இல்லை; அதிலும் குறிப்பாக ஓர் இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர், அதிகாரத் தரப்புடன் ஒத்துழையுங்கள் என ஆனந்தராஜுக்கு ஆலோசனைக் கூறி வை விரித்து விட்டார்.

“நான் மாநில அரசில் அங்கம் வகித்த போது, ஆனந்தராஜை தற்காத்து அவருக்கு ஆதரவாக இருந்தேன்; இதனால் அவர் மீது கை வைக்க அதிகாரிகள் தயங்கினர்.”

“இவ்வளவு ஏன், மறைந்த ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமி வேலு கூட அடிக்கடி என்னைத் தொடர்புக் கொண்டு, அக்குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பார். ஆனால் இன்று நடப்பதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது” என ராமசாமி சொன்னார்.

100 ஆண்டு கால செழிப்பான வணிகத்தை சீர் குலைக்கும் முயற்சிகளுக்கு பொறாமையும் முக்கியக் காரணமாக இருக்கலாம்; வேறு காரணங்களும் உள்ளன.

இப்போது வேறு வழியில்லாமல், தனது உரிமையைத் தற்காக ஆனந்தராஜ் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்.

அவரை bully செய்வதை மாநில அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மடானி அரசாங்கம் கடும் உழைப்பாளியான ஆனந்தராஜ் போன்றவர்களை இப்படி நடத்துவது துரதிஷ்டவசமானது என அறிக்கையொன்றில் ராமசாமி காட்டமாகக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!