Latestஉலகம்

கேரளாவில், சாக்லேட் சிராப் போத்தலில், இறந்து கிடந்த எலி ; மன்னிப்புக் கோரியது ஹெர்ஷே

புதுடெல்லி, ஜூன் 24 – இந்தியாவில், அண்மையில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கும் வீடியோ ஒன்று, இணைய பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீல் செய்யப்பட்ட ஹெர்ஷே சாக்லேட் (Hershey Chocolate) சிராப் பானத்தில், எலி ஒன்று இறந்து கிடக்கும் காட்சிகள், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதே அதற்கு காரணம் ஆகும்.

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

அந்த வீடியோவில், நபர் ஒருவர் சிராப் பானத்தின் ஒரு சிறு பகுதியை கரண்டியில் ஊற்றுகிறார்.

அந்த திரவத்தில் முடி இருப்பதை காண முடிகிறது.

சந்தேகம் எழுவே, சீல் செய்யப்பட்ட போத்தல் மூடியை முழுவதுமாக திறந்து, பானத்தை ஒரு குவளையில் ஊற்றி பார்த்த போது, அதில் எலி ஒன்று இறந்து கிடப்பதை காண முடிந்ததாக, அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பானத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் மூவர் அருந்தியதாகவும், அதில் பெண் ஒருவர் மயக்கமுற்றதாகவும் அந்நபர் பதிவிட்டுள்ளார்.

எனினும், சிகிச்சைக்கு பின்னர் அப்பெண் நலமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அச்சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பிடம் புகார் செய்யப்பட்டுவிட்ட் போதிலும், இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என, சம்பந்தப்பட்ட பயனர் பதிவிட்டுள்ளார்.

இவ்வேளையில், அந்த பதிவின் கீழ் ஹெர்ஷே நிறுவனமும் கருத்துரைத்துள்ளது.

“இந்த பதிவை பார்த்து நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் வாங்கிய பான போத்தலின் குறியீட்டு எண்ணை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். உங்களுக்கு கட்டாயம் உதவி வழங்கப்படும்” என ஹெர்ஷே கூறியுள்ளது.

முன்னதாக, இந்தியாவில், ஆன்லைன் வாயிலாக வாங்கப்பட்ட அமுல் ஐஸ்கிரீமில், பூரான் உரைந்துப்போயிருந்த வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!