கோலாலம்பூர், ஏப் 21 – நெகிரி செம்பிலானில் Kuala Pilahவுக்கு அருகே நேற்றிரவு சாலைஓரத்தில் தாக்கப்பட்ட தாதி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் விழுந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Johol , Jalan Simpang Tiga Dangiயில் தலைக்கு கீழே அந்த தாதி தாக்குதலுக்கு உள்ளானதாக நம்பப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த தாதியின் காருக்கு அருகே அவரது காலணிகள் காணப்பட்டது. இரவு 10 மணியளவில் அவர் விழுந்து கிடந்த இடத்தில் அவரது காரின் இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக Kuala Pilah துணை போலீஸ் தலைவர் Syahrul Anuar Abdul Wahab கூறினார்.
அந்த தாதி மயக்கத்துடன் கீழே விழுந்த கிடந்தததை பொதுமக்கள் கண்டதோடு அவர் கொள்ளயடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிகிச்சைக்காக அப்பெண் Tuanku Ampuan Najihah மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Syahrul Anuar தெரிவித்தார். மருத்துவமனையில் வேலை முடிந்து Dangi யை நோக்கி அப்பெண் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுவதால் அவரது வாக்குமூலத்தை பெறுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த தாதிக்கு சொந்தமான எந்தவொரு பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனினும் அவரது தலையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக Syahrul கூறினார்.