Latestமலேசியா

கோலாலம்பூரில், சுகாதார அமைச்சின் தலையீட்டால், ‘வேப் வென்டிங் மெஷின்’ செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தியது பேரங்காடி நிர்வாகம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12 – தலைநகரிலுள்ள, பேரங்காடி ஒன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, வேப் வென்டிங் மெஷின் செயல்பாட்டை, அதன் நிர்வாகம் உடனடியாக நிறுத்தியுள்ளது.

புகைக்க பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும், விற்பனை செய்வதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விளக்கமளிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த வேப் வென்டிங் மெஷின் செயல்பாட்டை நிறுத்த சம்பந்தப்பட்ட பேரங்காடி நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததாக, சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம் மற்றும் 2004-ஆம் ஆண்டு புகையிலை தயாரிப்பு கட்டுப்பாட்டு விதிகளின் கீழ், வென்டிங் மெஷின் அல்லது விற்பனை இயந்திரங்கள் மூலம் இ-சிகிரெட்டுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், சமூக கடப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட வேப் வென்டிங் மெஷின் செயல்பாடுகளை நிறுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, பேரங்காடி நிர்வாகம் அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, தலைநகரிலுள்ள, பேரங்காடி ஒன்றில், வேப் வென்டிங் மெஷின் வாயிலாக, மின்னியல் சிகிரெட்டுகள் எளிதாக விற்கப்படுவது, சமூக ஊடக பயனர்களின் கண்டனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!