Latestமலேசியா

கோலாலம்பூரில் ஜாலான் சீலாங்கில் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் பரிசோதனை – 500 பேர் கைது

கோலாலம்பூர், டிச 21 – கோலாலம்பூர் மாநகரில் வெளிநாட்டவர்களின் முக்கிய சந்திப்பு மையமாக திகழும் ஜாலான் சீலாங்கில் இன்று 1,000-த்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போலீஸ், பொது நடவடிக்கை படையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க நிறுவனத்தின் இதர அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் நான்கு வரிசைக் கடைகளில் பரிசோதனை நடத்தியதோடு அந்த பகுதியில் குற்றவாளிகள் எவரும் தப்பியோடாதபடி அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட அந்த திடீர் நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மதியம் ஒரு மணிவரை 500 வெளிநாட்டினர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத காரணங்களுக்காவும் பலர் கைது செய்யப்பட்டனர். ஜாலான் சீலாங்கில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கையை முறியடிப்பதோடு வர்த்தகர்கள் சட்டப்பூர்வமாக வர்த்தகம் நடத்தி வருகின்றனரா அல்லது அங்குள்ள வர்த்தக இடங்களில் வெளிநாட்டினர் வர்த்தகம் புரிந்து வருகின்றனரா என்பதை கண்டறியும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பல நிறுவனங்கள், மற்றும் அங்கீகாரமற்ற மருந்துகளை பயன்படுத்திவரும் 24 மணி நேரம் நடத்திவரும் கிளினிக்குகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும் சோதனை நடத்தியபோது கிளினிக்குகள் பல மூடப்பட்டிருந்தன. சில கடை வீடுகள் மிகவும் அசுத்தமாக இருந்தன, அந்த கடை வீடுகளின் மேல் மாடிப் பகுதி தொழிலாளர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக போலீஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!