Latestமலேசியா

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் – வி.கே.கே ராஜசேகரன் நேரடிப் போட்டி

கோலாலம்பூர், ஏப் 18 – கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அதன் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவனை எதிர்த்து வி.கே.கே ராஜசேகரன் போட்டியிடுகிறார். மலேசியாவில் 96 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோலாலம்பூர் – சிலாங்கூர் வர்த்தக சம்மேளனத்தின் ஆண்டு கூட்டமும் தேர்தலும் ஏப்ரல் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. இன்று இந்த வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் , துணைத்தலைவர்,உதவித் தலைவர் ,பொருளாளர் மற்றும் 14 செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு இரு அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நிவாஸ் ராகவன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு குமரகுருவும் ,உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ சந்திரசேகரன், பொருளாளர் பதவிக்கு டத்தின் மகேஸ்வரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராஜசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு பிரபாகாரன், உதவித் தலைவர் பதவிக்கு பன்னீர் செல்வமும், பொருளாளர் பதவிக்கு செல்வராஜூம் போட்டியிடுகின்றனர், செயலவை உறுப்பினர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணியின் சார்பில் ராம்குமார், குணராஜ், சண்முக செல்வி, மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி இராமன், பிரபாகரன் கோவிந்தன், செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்ரமணியம், கவிமாறன், நாகராஜன், அமுதா , ராம்குமார், ராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே ராஜசேகரன் அணியில் செயலவை உறுப்பினர் பதவிக்கு டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பால்மிரா பிபி, டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம் விக்னேஸ்வரன், டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர், டோனி கிளிபெர்ட், மீனாட்சி கல்யாண சுந்தரம், ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயலவை உறுப்பினர் பதவிக்கு ஜமுனா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!