
கோலாலம்பூர், ஜூன்-13-கோலாலம்பூர், சன்வே வெலோசிட்டியில் உள்ள TikTok அலுவலகத்திற்கு வெளியே ‘Himpunan Gegar TikTok எனும் அமைதி மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பயனர் கணக்குகள் காரணமின்றி முடக்கப்படுவதாகவும், கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி இந்த ஒன்று கூடல் நடத்தப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட பயனர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
எனினும், சன்வே வெலோசிட்டி பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அரசாங்கம் அண்மையில் TikTok நிறுவனத்திற்கு எதிராக உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை பலப்படுத்துமாறு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கும், பயனர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் இடையே இந்தச் சிக்கல் எழுந்துள்ளது.



