கோலாலம்பூர் , ஏப் 12 – எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஆளும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து பக்காத்தான் ஹரப்பான் இன்னும் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லையென பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து இன்னும் தாம் எவரிடமும் விவாதிக்கவில்லையென அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோலா குபு பாரு தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு DAP வேட்பாளர் நிறுத்தப்படுவார் என இதற்கு முன் சிலாங்கூர் Pakatan Harapan தலைவர் Amiruddin Shari தெரிவித்திருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP யின் Lee Kee Hiong புற்றுநோயின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி காலமானதை தொடர்ந்து கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.