Latestமலேசியா

கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி

கோலாலம்பூர், ஏப் 25 – மே 11ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் , கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் DAP யின் Pang Sock Tao என்ற இளம் வேட்பாளரை பக்காத்தான் ஹராப்பான் களம் இறக்குகிறது. வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் Nga Kor Mingகின் பத்திரிகை செயலாளருமான 31 வயதுடைய Pang Sock Tao னின் பெயரை DAP யின் தலைமை செயலாளர்
Anthony Loke நேற்றிரவு அறிவித்தார். கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை பரிசீலித்தபின் இந்த இடைத் தேர்தலில் DAPயின் வேட்பாளராக Pang தேர்வு செய்யப்பட்டதாக Anthony Loke கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதிப்பதற்கு ஆற்றலும் திறமையும் பெற்ற வேட்பாளராக அவர் திகழ்கிறார் என கோலா குபு பாரு Taman Gamelan சேவை நிலையத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்சியில் உரையாற்றியபோது அந்தோனி லோக் தெரிவித்தார். தெனாகா நேசனல் பல்கலைக்கழகத்தில் மின்சார மற்றும் மின்னியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவரான Pang இதற்கு முன் எரிபொருள், அறிவியல், தொழிற்நுட்பம், சுற்றுப்புற மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சரின் உதவியாளராகவும் DAP யின் Ubah TV தாயாரிப்பாளராகவும் 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!