Latestமலேசியா

கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில் மைவி காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் மரணம்

சுக்காய், மே 13 -கோலா தெரெங்கானு – குவாந்தான் சாலையில், 158 ஆவது கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவி காரின் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை மணி 4.20க்கு நடந்த இந்தச் சம்பவத்தில், KTM 250 டியூக் ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 51 வயதான சுல்கர்னைன் ராவி, என் ஆடவர் இறந்தார்.

குவாந்தானில் உள்ள Kampung Chendor Baru வைச் சேர்ந்த அவர் லோரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் என கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ரஷி ரோஸ்லி (Mohd Razi Rosli) தெரிவித்தார்.

அவர்கள் போக்குவரத்து எச்சரிக்கை விளக்கு சந்திப்பை அடைந்தபோது, ​​பச்சை போக்குவரத்து விளக்கு மின்னிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளோட்டி தனது பயணத்தைத் தொடர்ந்த வேளையில் , கார் ஓட்டுனரும் அங்கிருந்து வெளியேறியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி அக்காரில் மோதினார்.

தலை மற்றும் உடலில் கடுமையாக காயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!