Latestமலேசியா

கோவிட் கால தேர்தல் நினைவுகளோடு கட்டாயப் பணி ஓய்வுப் பெறும் SPR தலைவர்

கோலாலம்பூர், மே-10, தேர்தல் ஆணையம் SPR-ரின் தலைவர் Tan Sri Abdul Ghani Salleh, நேற்றுடன் கட்டாயப் பணி ஓய்வுப் பெற்றுள்ளார்.

இதையடுத்து நாளைய குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலே SPR தலைவர் என்ற முறையில் அவர் தலைமையேற்ற கடைசிப் பணியாகும்.

SPR-ரின் முன்னாள் செயலாளருமான Abdul Ghani, 66 வயதைப் பூர்த்திச் செய்யும் வரை அப்பொறுப்பில் இருப்பார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

SPR தலைவராக பதவி வகித்தக் காலக்கட்டத்தில், கோவிட் கால தேர்தல்களே தமது நினைவில் நீங்கா இடம் பிடிக்கும் வித்தியாசமான அனுபவம் என Abdul Ghani வருணித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக எந்தவோர் அரசியல் கட்சியும் பெரும்பான்மைப் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் அளவுக்கு தேர்தல் முடிவு அமைந்த 15-ஆவது பொதுத் தேர்தலும் இவர் காலத்தில் நடந்தது தான்.

2020 ஆகஸ்ட் மாதம் தொடங்கி அவர் அப்பொறுப்பை வகித்து வந்தார்.

SPR-ருடன் பணியாற்றுவதற்கு முன், குவாலா லங்காட் மாவட்ட நகராண்மைக் கழகத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பதவிகளையும் Abdul Ghani வகித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!