பியூபோர்ட், மே 31 – சபா, பியூபோர்ட், கம்போங் டதுங் மெலபாவ்விலுள்ள, வீடொன்றில், பணி ஓய்வுப் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவர் கட்டி வைக்கப்பட்ட பின், அவரது வீடு, கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணிந்த ஆடவன் ஒருவன், அந்த ஆசிரியரின் வீட்டில் புகுந்து அவரை கட்டி வைத்து விட்டு, கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த கொள்ளைச் சம்பவம் நேற்று அதிகாலை மணி 2.40 வாக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தில், அந்த ஆசிரியருக்கு சொந்தமான தங்க வளையல், ஈராயிரத்து 300 ரிங்கிட் ரொக்கப் பணம், மற்றும் அடையாள அட்டை அடங்கிய கைப் பையை ஆகியவற்றை அந்த ஆடவன் கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக, பியூபோர்ட் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் இஸ்மாயில் அப்துல்லா தெரிவித்தார்.
சமையலறை கதவு வாயிலாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவ்வாடவன், ஆசிரியரை கட்டிப்போட்டு விட்டு வீட்டை கொள்ளையிட்டுள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த கொள்ளை சம்பவம் விசாரிக்கப்படும் வேளை ; அவ்வாடவனை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.