Latestமலேசியா

சபா பெர்னாமில் பரிமாற்றத்திற்கான தற்காலிக வீட்டில் 20 குடியேறிகள் கைது

கோலாலம்பூர், மே 19 – கடல் வழியாக    குடியேறிகளை  கடத்திவரும் கும்பலின்  நடவடிக்கைக்கு  சிலாங்கூர், Sabak Bernam-மில் வீடு ஒன்று  தற்காலிகமாக  தங்கியிருக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதை   இன்று அதிகாலையில் அதிகாரிகள் கண்டறிந்ததன் மூலம் இந்த விவகாரம்   அம்பலத்திற்கு வந்துள்ளது.  புக்கிட் அமான்  குற்றப் புலனாய்வுத்துறையின்  ஆட்கடத்தல் எதிர்ப்பு பிரிவின்   அதிகாரிகளைக்  கொண்ட குழுவினர்  இன்று அதிகாலை மணி  1.30 அளவில்  அந்த வீட்டில்  மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில்   20 குடியேறிகளை கைது செய்தனர்.  பல்வேறு  குற்ற செயல்கள்  தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த    அந்த  குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான்  குற்றவியல் துறையின் ஆட்கடத்தல் பிரிவின்  முதிர்நிலை துணை கமிஷனர்  Soffian  Santong   தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டின் ஆட்கடத்தல் சட்டத்தின்    26 A விதியின்  கீழ்   29 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.  22 முதல்  42 வயதுடைய  மூன்று பெண்கள் உட்பட   இதர  8 இந்தோனேசிய  பிரஜைகள்   1959 மற்றும்  1963ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின்     6வது விதி  உட்பிரிவு  (1)( C ) யின்   தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக  மலேசியாவிற்குள்  வெளிநாட்டினர் கொண்டுவரப்படுவதால் அதனை  துடைத்தொழிக்கும் நோக்கத்தில்    OPS Pintas Transit Migran நடவடிக்கையின் கீழ்    அவர்களுக்கு எதிராக  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக    Soffian Santong குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!