Latestமலேசியா

சமூக நலத் துறையில் 674,000 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பதிவு

புத்ரா ஜெயா, 2022 ஆம் ஆண்டுவரை நாட்டில் 674,548 மாற்றுத் திறனாளிகள் சமூக நலத்துறையில் பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்த தொகை இரண்டு விழுக்காடை பிரதிநிதிக்கிறது என தேசிய புள்ளி விவரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ Mohd Uzir Mahidin தெரிவித்தார். உலகளாவிய நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் மதிப்பீட்டை விட இந்த தொகை மிகவும் குறைவாகும் என அவர் கூறினார். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை 1.3 பில்லியன் பேர் பார்வையிழந்தவர்களாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் இது 16 விழுக்காடை பிரதிநிதிப்பதாக Mohd Uzir தெரிவித்தார்.

மலேசியாவில் சமூக நலத்துறையில் பதிவு செய்துள்ள 245, 015 மாற்று திறனாளிகளில் அல்லது 36. 3 விழுக்காட்டினர் உடல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் . சிகிச்சையை மேற்கொண்டுவரும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டு 3,940 பேராக அதிகரித்துள்ளது. அரசாங்க சேவையில் வேலை செய்யும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கையும் 3,724பேராக உயர்ந்துள்ளது. அதே வேளையில் தனியார் துறையில் 3,186 தனிப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வேலை செய்து வருவதாகவும் Mohd Uzir தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!