Latestமலேசியா

சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை பதிவு; பிப்ரவரி வரை 20,035 பதிவுகள்

கூலாய், மார்ச் 14 – மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ‘எம்.சி.எம்.சி’-யின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை திட்டத்தில் பிப்ரவரி வரை 20,035 ரொக்கமில்லா பண பரிவர்த்தனை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023-யில் மலாக்காவில் அறிமுகமான இத்திட்டத்தில், 2,740 வர்த்தகர்களும் பதிவு செய்துள்ளனர் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

தற்போது ஜோகூர், நெரிகிரி செம்பிலான், பகாங் மற்றும் மலாக்காவில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே இவ்வாண்டு இறுதிக்குள், மாநில அரசு, எம்.சி.எம்.சி, ஃபெல்டா, நிதிச் சேவை வழங்குநர்கள் மற்றும் வங்கிகளின் கூட்டு ஒத்துழைப்புடன் 10 ஆயிரம் சமூக ரொக்கமில்லா பண பரிவர்த்தனை இலக்கை அடைய முடியும், என்று தியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசிய இலக்கவியல் முன்னெடுப்பின் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த ரொக்கமில்லா பண பரிவர்த்தனை முறையின் வழி வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இதன் சேவையை கொண்டு சேர்ப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

அதோடு உள்ளூர் சமூகத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!