Latestமலேசியா

சமூக வலைதளங்களில் பாலியல் வர்த்தகத்தை துடைத்தொழிப்பதில் போலீஸ் தீவிரம்

கோலாலாம்பூர், ஜூன் 27 – சமூக வலைத்தளங்களில் பாலியல் சேவைகள் மற்றும் வெளிப்படையான உள்ளடக்கங்கள் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் ( Siti Kamsiah Hassan ) தெரிவித்திருக்கிறார். இணைய தளங்களின் செயல்பாடுகளைக் கையாள்வதற்கான சட்டங்களை வலுப்படுத்த போலீஸ்துறை, சட்டத்துறை தலைவர் அலுவலகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த முயற்சியில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் அடஙகும் . சமூக ஊடக நிர்வாகிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் தளங்களில் இருந்து பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அகற்றுவதாக இந்த நடவடிக்கை அமையும் என சித்தி காசிம் தெரிவித்தார்.

“சில ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்கள் தனிநபர்கள் அத்தகைய உள்ளடக்கத்தை நேரடியாகப் புகாரளிக்க அனுமதிக்கும் தளங்களை உருவாக்கியுள்ளன. இந்த ஒத்துழைப்பில் வெளிப்படையான உள்ளடக்கத்தைப் புகாரளித்தல், அகற்றுதல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அடங்கும் என்று அவர் இணையத்தள பதிவேடான FMTயிடம் கூறினார். ஆலோசனை அமர்வுகள் மூலம் உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு உட்பட, நெருக்கமான புகைப்படங்கள் கசிந்து ஆன்லைனில் பகிரப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸ் துறையும் ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவித்தார். விசாரணைகள் விவேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் சுரண்டல் சம்பந்தப்பட்ட புகார்களில் நாங்கள் கடுமையாக இரகசியத்தைப் பாதுகாக்கிறோம். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்த மாட்டோம் என்றும் சித்தி கம்சியா உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!