Latestமலேசியா

சர்ச்சைக்குரிய 2 சமய சொற்பொழிவாளர்கள் மீது தனிப்பட்ட வழக்குத் தொடர முடியுமா என்பது ஜூன் 7-ம் தேதி தெரியும்

புத்ரா ஜெயா, மே-21, இஸ்லாம் அல்லாதோரின் மதங்களையும், பழக்க வழக்கங்களையும் இழுவுப்படுத்தியதாகக் கூறி இரு சுயேட்சை இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர்கள் மீது தனிப்பட்ட வழக்கைப் பதிவுச் செய்ய, சமூக ஆர்வலர் S. Shashi Kumar-ரை அனுமதிப்பதா இல்லையா என்பதை மேல் முறையீட்டு நீதிமன்றம் அடுத்த மாதம் முடிவு செய்யவிருக்கிறது.

குற்றவியல் சட்டத்தின் 133-வது பிரிவின் கீழ் Muhammad Zamri Vinoth மற்றும் Firdaus Wong மீது தனிப்பட்ட வழக்குத் தொடர Shashi Kumar முன்வைத்த கோரிக்கையை, உயர் நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது.

அதனை எதிர்த்து Shashi Kumar செய்த மேல் முறையீட்டை இன்று செவிமெடுத்த மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கியக் குழு, அது குறித்து ஜூன் 7-ஆம் தேதி முடிவுச் செய்யப்படும் என்றது.

Private Prosecution அதாவது தனிப்பட்ட வழக்கு என்பது, தனிநபர் ஒருவர் மேஜிஸ்திரேட்டை அணுகி இன்னொரு நபரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட தேசிய சட்டத்துறை அலுவலகத்தை உத்தரவிடக் கோருவதாகும்.

இஸ்லாத்துக்கு மதம் மாறி, சுயேட்சையாக சொற்பொழிவுகளை மேற்கொண்டு வரும் Zamri Vinoth-தும், Firdaus Wong-ங்கும் மற்ற மதங்களை இழிவாகப் பேசி வருவதாகப் பரவலாகவே புகார்கள் எழுந்துள்ளன.

2020-ல் அவ்விருவர் மீது செய்யப்பட்ட புகார்கள் அடிப்படையில், இன-மத அம்சங்களை முன் வைத்து வெவ்வேறு குழுக்களிடையே மோதலை உண்டாக்கியது தொடர்பில் விசாரணை நடைபெறுவதாக போலீஸ் அப்போது கூறியிருந்தது.

விசாரணை முடிந்து அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்கு ஈராண்டுகளுக்குக் குறையாமலும் ஐந்தாண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!